Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

உளவளத்துணையாளர்களுக்கான நான்காவது செயலமர்வு – யாழ்ப்பாண மாவட்டம்

உளவளத்துணையாளர்களுக்கான நான்காவது செயலமர்வு – யாழ்ப்பாண மாவட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கும் புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு செயன்முறை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் தொடரின் நான்காவது செயலமர்வு, யாழ் மாவட்டத்தை இலக்காகக் கொண்டு 21.07.2026 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எம். பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண கல்விச் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், மேலதிக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் பிரசன்ன பிரியலால் மற்றும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், போதைப்பொருளற்ற எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்டத்தின் உளவளத்துணை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்காக திரு. ஐ. பிரவீன் (பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம்), டாக்டர் வினோதா அச்சுதன் (மனநல வைத்திய நிபுணர்) ஆகியோரால் சிறப்பு விரிவுரைகள் வழங்கப்பட்டன. நிறைவாக, துறைசார் நிபுணர்கள் பங்குபற்றிய விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித், மனநல வைத்திய நிபுணர் டாக்டர் வினோதா அச்சுதன், சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வைத்திய நிபுணர் டாக்டர் எஸ். நித்திரூபன் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் ஐ. பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.