Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

மாவட்ட உளவளத்துணையாளர் குழாமைத் தாபிக்கும் இரண்டாவது நிகழ்ச்சித் திட்டம் - காலி மாவட்டம்

மாவட்ட உளவளத்துணையாளர் குழாமைத் தாபிக்கும் இரண்டாவது நிகழ்ச்சித் திட்டம் – காலி மாவட்டம்

இப்பணியகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் ஊடாக முன்னாய்வு மற்றும் பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவசியமான உளவளத்துணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உளவளத்துணையாளர்கள் இன்மை காரணமாக அச்செயற்பாட்டின் வெற்றியில் காணப்படுகின்ற தடைகளை நிவர்த்தித்துக் கொள்ளும் அடிப்படை நோக்கத்துடன், மாவட்ட உளவளத்துணையாளர் குழாம் தாபிக்கும் நிகழ்ச்சித் திட்டத் தொடரின் இரண்டாவது நிகழ்ச்சித் திட்டம் காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு 2026.08.05 அன்று காலி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர் முதுநிலை பேராசிரியர் வசந்தா சுபசிங்ஹ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சித் தொடரானது, காலி மாவட்டச் செயலாளர் K.U. சந்திரலால் அவர்களின் தலைமையில், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி மற்றும் அபிவிருத்தி) G.G. லக்ஷ்மி காந்தி அவர்கள், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சிரான் அமித், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு என்பவற்றின் சிரேஷ்ட உளவியல் உளவளத்துணையாளர் பிரபா யட்டவர அவர்கள் உள்ளிட்ட புனர்வாழ்வுப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உளவளத்துணையாளர்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டது.

இக்குழாமின் ஊடாகத் தெரிவுசெய்யப்படவுள்ள உளவளத்துணையாளர்களின் வளப் பங்களிப்பானது முன்னாய்வு மற்றும் பின்னாய்வு செயற்பாடுகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்கமைய புனர்வாழ்வுபெறுநர்கள் நிலையத்தினுள் இருக்கும் காலப்பகுதியில் சிதைவடைந்த குடும்பக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கும், புனர்வாழ்வுபெறுநர் பற்றிய நேர்மறையான எண்ணங்களைக் குடும்பத்தினுள் தோற்றுவிப்பதன் ஊடாக அவசியமான பின்னணியை உருவாக்குவதற்கும், புனர்வாழ்வு பெறுபவர் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னரும் குறித்த குடும்பச் சூழலில் சிறந்த உறவுகளைப் பேணிச் செல்வதற்கும், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தவிர்ப்பதற்கும் அவசியமான உளவளத்துணையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, உளவளத்துணை பற்றிய சிறப்புரை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சிரேஷ்ட உளவியல் உளவளத்துணையாளர் பிரபா யட்டவர அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

மேலும், புனர்வாழ்வு பெறுபவர்களின் மனநிலை மற்றும் உளவளத்துணையின்போது அவர்களுடன் நேரடியாகச் செயற்படும்போது அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விடயங்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளல், நவோதாவ மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையத்தின் உளவளத்துணையாளர் நிமாயா பிரியமாலி அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.