Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி

நச்சுப் போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசியப் பிரச்சாரத்திற்கு இணையாக, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியானது இன்றைய தினம் (2026.06.26) காலி முகத்திடலில் ஆரம்பமாகி கொள்ளுப்பிட்டி சந்தி வரை பயணித்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோரின் தலைமையில், அமைச்சின் செயலாளர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவர் ஜே.ஏ.கே. மார்க், புனர்வாழ்வுப் பணியகத்தின் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் வசந்தா சுபசிங்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சிரான் அமித் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸார், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வுப் பணியகம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த பேரணி நடைபெற்றது.