போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு குறித்து பிரவுன்ஸ் ஹோட்டல் பணியாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சித்திட்டம்
புனர்வாழ்வுப் பணியகமும் பிரவுன்ஸ் ஹோட்டல் குழுமமும் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு விழிப்புணர்வு வேலைத்திட்டம் 2026.08.24 அன்று வைக்கால் கிளப் ஹோட்டல் டால்பினில் நடைபெற்றது.
அவ்ஹோட்டல் குழுமத்தின் அழைப்பிற்கு அமைவாக, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. எக்சத் விஜேரத்ன அவர்களின் வழிகாட்டலில், முகாமையாளர் திரு. மனோஜ் பெரேரா மற்றும் நிர்வாக முகாமையாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் லக்கி ரேமண்ட் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் அவர்கள், இளைஞர் சமுதாயத்தின் சமூகப் பொறுப்பு, பொறுப்புடன் செயல்படுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு எவ்வாறு புனர்வாழ்வு அளிப்பது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு வளவாளராகக் கலந்துகொண்ட முதுநிலை உளவியல் ஆலோசகரும் உளவியல் சிகிச்சை நிபுணருமான திரு. சமிந்த வீரசிரிவர்தன, போதைப்பொருளுக்கு அடிமையாதல், அதற்கு வழிவகுக்கும் காரணிகள், உளவியல் தாக்கங்கள் மற்றும் ஆளுமை விருத்தி குறித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.